ஜெயங்கொண்டம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்


ஜெயங்கொண்டம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 7 Aug 2021 1:46 AM IST (Updated: 7 Aug 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சாமிதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
ஜெயங்கொண்டம், தா.பழூர், உடையார்பாளையம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் இன்று(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இந்த துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, வாரியங்காவல், இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி, பரணம், சோழங்குறிச்சி, இடையார், த.மேலூர், த.பொட்டக்கொல்லை, துளாரங்குறிச்சி, தா.பழூர், சிலால், வானதிராயன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம், நாயகனைப்பிரியாள், பொற்பதிந்தநல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி மற்றும் அருகில் உள்ள துணை மின் நிலையங்களிலும், கிராமப் பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Next Story