சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் 54 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்
சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் 54 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சூரமங்கலம்
54 கிலோ வெள்ளி
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று ெரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அரவிந்த் குமார் தலைமையில் போலீசார் சந்திரமோகன், குணசீலன், பெரியசாமி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 5-வது நடை மேடையில் சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். ரெயில்வே பாதுகாப்பு படையினர் அவர் வைத்திருந்த 2 பைகளை சோதனை செய்தனர்.
அப்போது அதில் 54 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர், சேலம் அருகே உள்ள சிவதாபுரம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சதீஸ் ஈஸ்வரன் என்பதும், கோவை-ஜோலார்பேட்டை ரெயிலில் பயணம் செய்ய காத்திருந்ததும் தெரியவந்தது.
வரி
மேலும் அவர் வைத்திருந்த வெள்ளி பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரூ.13 லட்சம் மதிப்புள்ள 54 கிலோ வெள்ளி பொருட்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சேலம் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து வெள்ளி பொருட்களை பார்வையிட்டு, அதற்கு வரியாக ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 24-ஐ விதித்தனர். தொடர்ந்து வரி செலுத்தப்பட்டவுடன், வெள்ளி ஆபரணங்கள் சதீஸ் ஈஸ்வரனிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story