அம்மன் கோவிலில் நகை திருட்டு


அம்மன் கோவிலில் நகை திருட்டு
x
தினத்தந்தி 6 Aug 2021 10:50 PM GMT (Updated: 2021-08-07T04:20:37+05:30)

நெல்லை அருகே அம்மன் கோவிலில் நகை திருட்டு போனது.

நெல்லை:
நெல்லை அருகே நல்லமாள்புரத்தில் வடக்குவாச்செல்வி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூசாரி முப்பிடாதி தினமும் பூஜை செய்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி இரவு பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் காலையில் கோவிலுக்கு சென்ற பூசாரி முப்பிடாதி, கோவில் திறக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு அம்மன் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றது ெதரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story