தென்காசி அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
தென்காசி அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
தென்காசி:
தென்காசி அருகே உள்ள மேல மெஞ்ஞானபுரத்தில் கல் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் நள்ளிரவில், அனுமதி வழங்கப்பட்டதற்கு மேலாக வெடி வைப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகளின் சுவரில் கீறல்கள் ஏற்படுகிறது என்றும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் குவாரிக்கான உரிமத்தை மீண்டும் புதுப்பிக்கக் கூடாது என்றும் வற்புறுத்தி நாம் தமிழர் கட்சியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் குணராமநல்லூர் பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் மற்றும் போலீசார் அங்கு சென்று நாம் தமிழர் கட்சி ஊழல் தடுப்பு பிரிவு செயலாளர் ஜோசப் தலைமையில் போராட்டம் நடத்திய அந்த கட்சியினர் மற்றும் பொதுமக்கள் 39 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story