திருவள்ளூர் அருகே மணல் கடத்தல்; 5 பேர் கைது
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு சப்-இன்ஸ்பெக்டர் சோபா தேவி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கோலப்பஞ்சேரி ஏரிக்கரை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சட்டவிரோதமாக மணல் கடத்தியதாக லாரி டிரைவரான நசரத்பேட்டையை சேர்ந்த சுரேந்தர் (வயது 23), அரவிந்தன் (39), அருண் (18) விஜயன் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
அதேபோல திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கத்தில் புன்னப்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ராஜேஷ் (25) முருகையன் (40) ஆகிய 2 பேரும் மாட்டு வண்டியில் திருட்டுத்தனமாக மணல் எடுத்து வந்தனர். இதை தொடர்ந்து போலீசார் 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து ராஜேஷ், முருகய்யன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story