வடமதுரை அருகே போலீஸ்காரர் வீட்டில் பணம் திருடிய வாலிபர் கைது
வடமதுரை அருகே போலீஸ்காரர் வீட்டில் பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள எலப்பார்பட்டியை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 35). இவர் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். அவரது மனைவி செல்வராணியும், பக்கத்து தெருவில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்தநிலையில் செல்வராணி நேற்று காலை தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வீட்டுக்குள் சென்று பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதில் வைத்திருந்த ரூ.16 ஆயிரத்து 500 திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து செல்வராணி வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்தின்பேரில், அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் ராமராஜன் (வயது 29) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் போலீஸ்காரர் வீட்டில் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ராமராஜனை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story