2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 7 Aug 2021 10:01 PM IST (Updated: 7 Aug 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

போளூர், செங்கத்தை சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மாட்டுப்பட்டி தெருவை சேர்ந்த நாகப்பன் என்பவரது மனைவி ருக்மணி (வயது 54). இவர், சாராயம் விற்றதாக போளூர் போலீசார் கைது செய்தனர். 

செங்கம் தாலுகா புதுப்பாளையம் வீரணந்தல் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சந்தோஷ்ராஜ் (32) என்பவர் சாராயம் விற்பனை செய்த போது செங்கம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் கைது செய்தார். 

இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி, கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார். 

இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் ருக்மணி, சந்தோஷ்ராஜ் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Next Story