அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்


அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 7 Aug 2021 5:08 PM GMT (Updated: 7 Aug 2021 5:08 PM GMT)

கொரோனா தாற்றில் இருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.

நாகப்பட்டினம்;
கொரோனா ற்றில் இருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார். 
கொரோனா 
நாகை ரயில் நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு வார விழா  கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. கொரோனா விழிப்புணர்வு குறித்த நாடகத்தை சைல்டு லைன் அமைப்பினர் நடித்து காட்டினர். இதைத்தொடர்ந்து சித்த மருத்துவ துறை சார்பில் கபசுரகுடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் பயணிகளுக்கு வழங்கப்பட்டது. நகராட்சி சார்பில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கூறியதாவது
தடுப்பூசி
கொரோனா  3-வது அலையை எதிர்கொள்ள நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். இதற்காக சமூக இடைவெளியை பின்பற்றுதல், முககவசம் அணிதல் மட்டும் இன்றி கட்டாயம் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி செலுத்தி கொள்வதே சிறந்த வழியாகும். இவ்வாறு அவர் கூறினார்.  முடிவில் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி வாசிக்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா, நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story