மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு


மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
x
தினத்தந்தி 7 Aug 2021 5:33 PM GMT (Updated: 2021-08-07T23:03:30+05:30)

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு

அரிமளம், ஆக.8 -
அரிமளம் அருகே உள்ள ஒணாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது65). வெளியூர் சென்று இருந்த இவர் ஒணாங்குடி பஸ் நிறுத்தத்தில் பஸ்சை விட்டு இறங்கி ரோட்டை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் பலத்த காயமடைந்த பழனியப்பன் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பழனியப்பன் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழனியப்பன் தி.மு.க. உறுப்பினர் ஆவார். இவர் தி.மு.க. தலைமையிடத்தில் 2 முறை பொற்கிளி பெற்றவர் ஆவார்.

Next Story