கஞ்சாவுடன் வாலிபர் கைது


கஞ்சாவுடன் வாலிபர் கைது
x
தினத்தந்தி 7 Aug 2021 5:36 PM GMT (Updated: 2021-08-07T23:06:50+05:30)

கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்செல்வம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது லெட்சுமிபுரம் ஊருணி மேல்கரையை தாண்டி உள்ள பகுதியில் சந்தேகதத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து சோதனையிட்டனர். அவரிடம் 2 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அதனை பறிமுதல் செய்து இதுதொடர்பாக கோரவள்ளியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் ஏந்தல் சந்துரு (வயது23) என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story