குழந்தைகளுக்கு 2 வயது வரை தாய்ப்பால் ெகாடுப்பது அவசியம்


குழந்தைகளுக்கு 2 வயது வரை தாய்ப்பால் ெகாடுப்பது அவசியம்
x
தினத்தந்தி 7 Aug 2021 11:16 PM IST (Updated: 7 Aug 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

குழந்தைகளுக்கு 2 வயது வரை தாய்ப்பால் கொடுப்பது அவசியம் என உலக தாய்ப்பால் வார விழாவில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேசினார்.

காட்பாடி

குழந்தைகளுக்கு 2 வயது வரை தாய்ப்பால் கொடுப்பது அவசியம் என உலக தாய்ப்பால் வார விழாவில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேசினார்.

உலக தாய்ப்பால் வார விழா

வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பில் உலக தாய்ப்பால் வார விழா காட்பாடியில் நேற்று நடந்தது. விழாவிற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட திட்ட அலுவலர் கோமதி வரவேற்றார்.

சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன், மருத்துவ அலுவலர் அகிலா ஆகியோர் திட்ட விளக்க உரையாற்றினர். டி.எம்.கதிர் ஆனந்த் எம்.பி., குழந்தைகளுக்குப் பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார். 

விழாவில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது;-
உலகத்தில் மானிடராகப் பிறப்பது அரிது. கொரோனோ வைரஸ் தொற்றின் காரணமாக பல உயிரினங்கள் பலியாகி உள்ளன.
பாலூட்டும் உயிரினங்களில் மனித உயிரினம் தான் சிறந்தது. மற்ற உயிரினங்கள் சொந்தக்காலில் நிற்க அதிக காலம் எடுத்துக் கொள்ளும்.

குழந்தைகளுக்கு தாய்ப்பால்..

தாய்ப்பால் இன்றியமையாதது. 2 வயது வரை குழந்தைகளுக்கு பெண்கள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதால் தான் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்கின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.

"முன்னதாக தாய்ப்பாலின் அவசியம் குறித்து பதாகைகள் மற்றும் கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதனை கலெக்டர் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ., பார்வையிட்டனர்.

Next Story