கொரோனா பாதித்த 22 பேர் குணம் அடைந்தனர்


கொரோனா பாதித்த 22 பேர் குணம் அடைந்தனர்
x
தினத்தந்தி 7 Aug 2021 6:31 PM GMT (Updated: 2021-08-08T00:01:44+05:30)

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதித்த 22 பேர் குணம் அடைந்தனர்

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவ மனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 249 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 22 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

Next Story