நெய்வேலியில் என்.எல்.சி. தொழிலாளி தற்கொலை


நெய்வேலியில் என்.எல்.சி. தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 8 Aug 2021 12:21 AM IST (Updated: 8 Aug 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலியில் என்.எல்.சி. தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

நெய்வேலி, 

நெய்வேலி டவுன்ஷிப் 5-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பில் வசிப்பவர் செம்புலிங்கம் (வயது 47). என்.எல்.சி.யில் நிரந்தர தொழிலாளியாக பணி செய்து வருகிறார். 

இவர் தனது சொந்த ஊரான ஊத்தங்காலில், புதிதாக சொந்த வீடு கட்டியுள்ளார். இதற்காக கடன் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது.  கடன் தொகைக்கு மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதால், அவருக்கு குறைவாகவே  சம்பளம் வந்துள்ளது.

இதனால், மன அழுத்தத்தில் இருந்த செம்புலிங்கம் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்த டவுன்ஷிப் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, செம்புலிங்கத்தின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து அவரது மனைவி இளவரசி (40) கொடுத்த புகாரின் பேரில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story