வில்லுப்பாட்டு பாடி கொரோனா விழிப்புணர்வு
குனிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் வில்லுப்பாட்டு பாடி கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருப்பத்தூர்
குனிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் வில்லுப்பாட்டு பாடி கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து குனிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் மாணவ-மாணவிகள் வில்லுப்பாட்டு மூலமும், கொரோனா வடிவில் முக மூடிகள் அணிந்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம், ஊர்வலம் நடத்தினர். நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.குழந்தைசாமி தலைமை தாங்கி பேசினார்.
பின்னர் பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி போடும் முகாமுக்கு சிறப்பு அழைப்பாளராக குனிச்சி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜி.தீபா, டாக்டர் அனிதா ஆகியோர் பங்ேகற்று கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து பேசினார்கள். இறுதியில் உதவி தலைமையாசிரியர் தாயுமானவன் நன்றி கூறினார்.
கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் குனிச்சி மெயின் ரோடு வழியாக சென்று ஊர் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார மேற்பார்வையாளர்கள், தூய்மைக் காவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
Related Tags :
Next Story