டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.18 ஆயிரம் மதுபாட்டில்கள் திருட்டு


டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.18 ஆயிரம் மதுபாட்டில்கள் திருட்டு
x
தினத்தந்தி 8 Aug 2021 1:01 AM IST (Updated: 8 Aug 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.18 ஆயிரம் மதுபாட்டில்களை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் மவுண்ட் ரோடு சாலையில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் டாஸ்மாக் கடை, கீழ்தளத்தில் பார் செயல்படுகிறது. அதில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பார் அடைக்கப்பட்டு உள்ளது. டாஸ்மாக் கடை மட்டும் செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று காலையில் டாஸ்மாக் ஊழியர்கள் வழக்கம்போல் கடையை திறந்து பார்த்தனர். அப்போது மதுபாட்டில்கள் வைக்கப்பட்டு இருந்த பெட்டிகள் திறக்கப்பட்டு இருந்தது. மேலும் மேல்தளத்தில் மர பலகைகளை கொண்டு அமைக்கப்பட்ட தரையில், துளை போடப்பட்டு இருந்தது. இதனால் அதன் வழியாக மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து மதுபாட்டிகளை திருடி சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து குன்னூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது நேற்று முன்தினம் நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்குள் மேல்தளத்தில் மர பலகைகளால் ஆன தரை என்பதால், அதில் துளையிட்டு புகுந்த மர்ம ஆசாமிகள் ரூ.18 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

அவர்கள் வந்து சென்றது, ஏதேனும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அந்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story