நெல்லை அருகே எட்டெழுத்து பெருமாள் கோவிலில் நகை கொள்ளை


நெல்லை அருகே எட்டெழுத்து பெருமாள் கோவிலில் நகை கொள்ளை
x
தினத்தந்தி 7 Aug 2021 8:54 PM GMT (Updated: 2021-08-08T02:24:12+05:30)

நெல்லை அருகே எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கதவை உடைத்து நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

நெல்லை:
நெல்லை அருகே உள்ள அருகன்குளம் கிராமத்தில்  எட்டெழுத்து பெருமாள் கோவில் உள்ளது. இ்ந்த கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கொள்ளையர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உள்ளனர். பின்னர் அங்கிருந்த பீரோவையும் உடைத்துள்ளனர். அவர்கள் ேகாவிலில் இருந்து 2 கிராம் தங்க பொட்டு, 4 கிராம் சங்கிலி உள்பட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடிச்சென்றனர். 

இந்த நிலையில் நேற்று காலை கோவிலுக்கு வந்த நிர்வாகி பரமசிவன் (வயது 60) கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் தாழையூத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 3 மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து நகைகளை கொள்ளைடித்தது பதிவாகி இருந்தது. 

இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story