கொரோனாவில் இருந்து குணமடைந்த 1 லட்சம் பேருக்கு தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை: சென்னை மாநகராட்சி


கொரோனாவில் இருந்து குணமடைந்த 1 லட்சம் பேருக்கு தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை: சென்னை மாநகராட்சி
x
தினத்தந்தி 8 Aug 2021 3:32 PM IST (Updated: 8 Aug 2021 3:32 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நபர்களை பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தொடர்பு கொண்டு தலைவலி, உடல் வலி உள்ளிட்ட ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா? என்பதை தெரிந்து கொண்டு, அறிகுறிகள் இருந்த நபர்களுக்கு தொடர்பு மைய தொலைபேசி வழியாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வந்தது.

உளவியல் ஆலோசனைகள், உணவு தொடர்பான சந்தேகங்களுக்கும் தொலைபேசி வழியாக டாக்டர்கள் மற்றும் 150 தன்னார்வலர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் இதுவரை 1 லட்சத்து 29 ஆயிரத்து 712 நபர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் ஒரு சில நோய் அறிகுறிகளுடன் இருந்த 5 ஆயிரத்து 874 பேர்களுக்கு ‘விட்மேட்’ செயலி மற்றும் வாட்ஸ்-அப் ஆகியவற்றில் வீடியோ அழைப்பின் மூலம் டாக்டர்களால் மருத்துவ ஆலோசனை இலவசமாக அளிக்கப்பட்டது.

இந்த தொலைபேசி ஆலோசனை மையத்தில் பணிபுரிய 150 பயிற்சி பெற்ற தொலைபேசி அழைப்பாளர்களை வழங்கிய சென்னை தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ரிங்கு மெச்சேரியை பாராட்டி மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நேற்று சான்றிதழை வழங்கினார். அப்போது உதவி கமிஷனர் பெர்மி வித்யா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story