ரெயில் பெட்டி தயாரிக்கும் பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு


ரெயில் பெட்டி தயாரிக்கும் பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 8 Aug 2021 10:07 AM GMT (Updated: 2021-08-08T15:37:25+05:30)

சென்னை ரெயில் பெட்டி தயாரிக்கும் பணியின்போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

சென்னை வண்ணாரப்பேட்டை சிதம்பரம் நகரில் வசித்து வந்தவர் சஞ்சீவ்குமார் (வயது 23). பீகாரைச் சேர்ந்த இவர், பெரம்பூர் கேரேஜ் வளாகத்தில் ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் வெல்டிங் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் ரெயில் பெட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த சஞ்சீவ்குமார், வெல்டிங் பணியின்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஐ.சி.எப். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story