திருவள்ளூர் மாவட்டத்தில் வெளிநாடு செல்பவர்களுக்கு கொரோனா 2-ம் தவணை தடுப்பூசி சிறப்பு முகாம்கள்; கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் அனைத்து வட்டாரங்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கலெக்டர் உத்தரவின்படி, வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாகவும், கல்வி நிமித்தமாகவும் செல்பவர்களுக்கான கொரோனா தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ள சிறப்பு முகாம்கள் திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி, பூந்தமல்லி தாய் சேய் நல மையம், கொள்ளுமேடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவற்றில் தினந்தோறும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்று வருகிறது.
எனவே மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் நடைபெறுகின்ற சிறப்பு முகாமின் மூலமாக வெளிநாடு செல்லுபவர்கள் இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்தி 2-ம் தவணை செலுத்தி கொள்ளலாம். மேலும் 63850 83345 மற்றும் 96556 17274 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என அதில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story