தூத்துக்குடி கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அனுமதி மறுப்பு
தூத்துக்குடியில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஆடி அமாவாசையையொட்டி மக்கள் கடற்கரைக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டது. கடற்கரையில் போலீசார் தடுப்புகள் அமைத்து தர்ப்பணம் கொடுக்க சென்ற பொதுமக்களை திருப்பி அனுப்பினர்.
தூத்துக்குடி:

ஆடி அமாவாசை
ஆடி மாதம் வரக்கூடிய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்த அமாவாசையாக கருதப்படுகிறது. இந்த அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்ய உகந்த நாளாக விளங்கி வருகிறது.
இதனால் கடற்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் மக்கள் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அனுமதி மறுப்பு
நேற்று ஆடி அமாவாசை நாளாகும். இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில், தூத்துக்குடி துறைமுகம் கடற்கரை, திரேஸ்புரம் சங்குகுளி காலனி மற்றும் மாவட்டத்தில் மக்கள் நீராடும் வசதி கொண்ட அனைத்து நீர்நிலை படித்துறைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
நேற்று காலை முதல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக அதிக அளவில் மக்கள் கடற்கரை நோக்கி சென்றனர். அவர்களை ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து காவலுக்கு நின்ற போலீசார் அனுமதி மறுத்து, திருப்பி அனுப்பினர். இதனால் மக்கள் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story