அவசர கால தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக வனப்பகுதிக்குள் தகவல் தொடர்பு வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.


அவசர கால தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக வனப்பகுதிக்குள் தகவல் தொடர்பு வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
x
தினத்தந்தி 8 Aug 2021 9:44 PM IST (Updated: 8 Aug 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

அவசர கால தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக வனப்பகுதிக்குள் தகவல் தொடர்பு வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

தளி,:
அவசர கால தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக வனப்பகுதிக்குள் தகவல் தொடர்பு வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
தகவல் தொடர்பு சாதனம்
அன்றாட வாழ்க்கைக்கான இன்றியமையாத சாதனங்களில் தகவல் தொடர்பும் ஒன்று. மன்னர்கள் காலத்தில் தோல்கருவிகள், கோவில்மணி, புறாக்கள், ஓலைச்சுவடிகளை சுமந்து சென்ற தூதுவர்கள், வாய்மொழியாக எழுந்த கூக்குரல் மூலம் தகவல் பரிமாற்றம் நடைபெற்றது. தனக்கு தெரிந்த ஒன்றை அங்கு பார்த்த நிகழ்வை அந்த பகுதிக்கு வருகைதரும் நபர்களுக்கு தெரிவிப்பதற்காக வரையப்பட்டவையே குகை ஓவியங்களும் பாறையில் செதுக்கப்பட்ட எழுத்துக்களும். குகைகளை வீடாக பயன்படுத்திய காலம் முதல் விண்ணிலே வீடு அமைத்து வாழும் வழிமுறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் தற்போதைய காலம் வரையிலும் அடிப்படைத் தேவையாக இருப்பது தகவல் தொடர்பு மட்டுமே. இது அறிவியல் சார்ந்த வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் எளிமையான வாழ்க்கைக்கும் அடிப்படையான ஒன்றாகும்.
சமூக வலைதளங்கள்
தகவல் தொழில்நுட்பத்தின் வெளிப்பாடாக ரேடியோ, வயர்லெஸ், பேஜர் உள்ளிட்ட சாதனங்கள் வந்தது.அதைத்தொடர்ந்து மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்த விஞ்ஞானத்தின் உதவியுடன் தகவல் தொடர்பு இன்று அபரிதமான வளர்ச்சியை அடைந்து உள்ளது.எந்த ஒரு தகவலையும் ஒரு நொடியில் உலகத்தில் உள்ள எந்த ஒரு மூலைக்கும் சமூக வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்க முடிகிறது. இது சமதளபகுதிக்கு மட்டுமே சாத்தியமாகும். 
ஆனால் அடர்ந்த வனப்பகுதியில் வசித்து வருகின்ற மலைவாழ் மக்களுக்கு தகவல் தொடர்பு இன்று வரையிலும் எட்டாக்கனியாகவே உள்ளது. இதனால் அவசரகால உதவிகள், வாழ்வாதாரத்திற்கான தேவைகளை பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 
வனப்பகுதியில்...
இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:-
விஞ்ஞானம் விண்ணளவு வளர்ந்துள்ள சூழலிலும் அடர்ந்த வனப்பகுதியில் வசித்து வருகின்ற எங்களுக்கு தகவல்தொடர்பு பண்டைய காலம் போன்றே முழுமையாக கிடைக்காமல் உள்ளது. இதனால் வனவிலங்குகளால் ஏற்பட்ட தாக்குதல், விபத்தில்சிக்கும் நபர்கள், பிரசவத்திற்கு தயாராகும் பெண்களை தொட்டில் மூலமாக நால்வர் இணைந்து ஒற்றையடிப்பாதையில் சுமந்து சென்று அடிவாரத்தை அடைந்த பின்பு வாகனத்தை பிடித்து ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல வேண்டி உள்ளது.
உயிரை காக்கும் பொன் போன்ற நிமிடங்கள் வாகனத்தை பிடிப்பதற்கு முன்பே செலவாகி விடுவதால் சிகிச்சை பெறுவதற்குள் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுகிறது. பாதை மற்றும் தகவல்தொடர்பு வசதி முழுமையாக இல்லாததை சாதகமாகக் கொண்டு நாங்கள் விளைவிக்கின்ற பொருட்களை இடைத்தரகர்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கி சென்று விடுகின்றனர். வனப்பகுதியில் விளைகின்ற பொருட்கள் தரமானதாக உள்ளதால் கூடுதல் விலைக்கு விற்று லாபத்தை ஈட்டிக் கொள்கின்றனர். உழைப்பை கொட்டி உயிரை பணையம் வைத்து இரவுபகலாக பாதுகாத்து பொருட்களை விளைவிக்கின்ற எங்களுக்கு ஏமாற்றம் நஷ்டமுமே மிஞ்சுகின்றது. தகவல் தொடர்பு இல்லாததால் எங்களால் பொருட்களுக்கான விலையை விசாரிக்க முடிவதில்லை.
குடும்பத்தினர் பாதிப்பு 
அதுமட்டுமின்றி எந்த ஒரு துக்க நிகழ்வனாலும் சுய நிகழ்வானாலும் அதை அருகில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வருகின்ற உறவினர்களுக்கு தெரிவிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதற்காக வனப்பகுதிக்குள் பயணம் மேற்கொள்ளும்போது வனவிலங்குகளுடன் மனித மோதலும் ஏற்படுகிறது.இதனால் ஏற்படும் உடல் ஊனத்திற்கும் உயிரிழப்புக்கும் சம்பந்தபட்டவரின் குடும்பத்தினர் பாதிப்பு அடைகின்றனர்.
எனவே அடர்ந்த வனப்பகுதியில் வசித்து வருகின்ற எங்களுக்கு தகவல் தொடர்பு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.இதனால் அவசரகால தேவைகள், உலக நடைமுறைகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலையை தெரிந்து கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும். அத்துடன் வனப்பகுதிக்குள் ஏற்படுகின்ற காட்டுத்தீ, வெளிநபர்கள் நடமாட்டம், ஆறுகளில் ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கு குறித்த தகவல்களை உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்க இயலும். 
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story