மரக்கன்றுகள் நடும் விழா
பரமக்குடி பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
பரமக்குடி,
பரமக்குடி புதுநகர் பகுதியில் உள்ள டாக்டர் அப்துல்கலாம் சி.பி.எஸ்.சி. பப்ளிக் பள்ளியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி பள்ளி வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
விழாவிற்கு பள்ளியின் சேர்மன் முகைதீன் முசாபர்அலி என்ற பாபு தலைமை தாங்கினார். அய்லுக் சிட்டி புரமோட்டர்ஸ் உரிமை யாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் கீழக்கரை தொழில் அதிபர் இலியாஸ் முகமது, ஐக்கிய ஜமாத் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயினுல் ஆலம், தி.மு.க. நகர் பொறுப்பாளர்கள் சேது கருணாநிதி, ஜீவரெத்தினம் உள்பட பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story