பெதப்பம்பட்டி நால் ரோட்டில் விபத்து ஏற்படாமல் தடுக்க சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பெதப்பம்பட்டி நால் ரோட்டில் விபத்து ஏற்படாமல் தடுக்க சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
x
தினத்தந்தி 8 Aug 2021 9:56 PM IST (Updated: 8 Aug 2021 9:56 PM IST)
t-max-icont-min-icon

பெதப்பம்பட்டி நால் ரோட்டில் விபத்து ஏற்படாமல் தடுக்க சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

குடிமங்கலம், 
பெதப்பம்பட்டி நால் ரோட்டில் விபத்து ஏற்படாமல் தடுக்க சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பெதப்பம்பட்டி நால்ரோடு
குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது சோமவாரப்பட்டி ஊராட்சி. சோமவாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பெதப்பம்பட்டியில் வங்கிகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கி வருகிறது.
பெதப்பம்பட்டி நால்ரோடு பொள்ளாச்சி- தாராபுரம் மாநில நெடுஞ்சாலையும்,உடுமலை- செஞ்சேரிமலை சாலையும் சந்திக்கும் முக்கிய இடமாக உள்ளது.கரூரில் இருந்து தாராபுரம், குடிமங்கலம், பெதப்பம்பட்டி வழியாக தினமும் கேரளாவிற்கு காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களுடன் சரக்கு வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.
பெதப்பம்பட்டியை சுற்றிலும் காற்றாலைகள் இயங்கி வருவதால் இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. போக்குவரத்து நெருக்கடி உள்ள இப்பகுதியில் சிக்னல் அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறி செல்கின்றனர்.இதனால் விபத்துஏற்படும் அபாயம் உள்ளது.
சிக்னல் அமைக்க கோரிக்கை
பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலை தற்போது 7 மீட்டரிலிருந்து 2.5 மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இருவழிப் பாதையாக இருந்தது தற்போது நான்கு வழி சாலையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் இருந்து குடிமங்கலம் வழியாக தாராபுரம் செல்லும் பஸ்கள் உடுமலையிலிருந்து பெதப்பம்பட்டி வழியாக செஞ்சேரிமலை செல்லும் பஸ்கள் செல்கின்றன. 
இந்தநிலையில் பெதப்பம்பட்டி நால் ரோட்டில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட போதிலும் சிக்னல் இல்லாததால் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறி செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
பெதப்பம்பட்டி நால்ரோட்டில் விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Next Story