உடலில் கத்தி போட்டு நூதன வழிபாடு


உடலில் கத்தி போட்டு நூதன வழிபாடு
x
தினத்தந்தி 8 Aug 2021 10:00 PM IST (Updated: 8 Aug 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

உடலில் கத்தி போட்டு நூதன வழிபாடு

பல்லடம்:
பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் தேசிய கைத்தறி தின எழுச்சி விழா நடைபெற்றது. பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில், தேவாங்கர் பேரவை சார்பில், தேசிய கைத்தறி தின எழுச்சி விழாவை முன்னிட்டு ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் முன்பு உடலில் கத்தி போட்டு கைத்தறி தொழில் சிறக்க நூதன வேண்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிசேக பூஜை நடத்தப்பட்டது. பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story