திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது


திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது
x
தினத்தந்தி 8 Aug 2021 10:02 PM IST (Updated: 8 Aug 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலனின்றி 4 பேர் பலியாகியுள்ளனர். 
80 பேருக்கு கொரோனா 
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று தமிழகத்தில் 1,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை தொற்று தற்போது குறைய தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கோவை, திருப்பூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
4 பேர் பலி 
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 520-ஆக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 79 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆயிரத்து 793-ஆக உள்ளது. 
மேலும், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 863 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 4 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை மாவட்டத்தில் 864-ஆக உயர்ந்துள்ளது. 

Next Story