தடையை மீறி சந்தையில் குவிந்த வியாபாரிகளுக்கு அபராதம்


தடையை மீறி சந்தையில் குவிந்த வியாபாரிகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 8 Aug 2021 10:36 PM IST (Updated: 8 Aug 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

சந்தையில் குவிந்த வியாபாரிகளுக்கு அபராதம்

திருப்பத்தூர்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் வார சந்தைகளை நடத்த தடை விதித்துள்ளது. அதனை மீறி கந்திலி பகுதியில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வாரச் சந்தை நடைபெறுவதாகவும், கந்திலி, கெஜல்நாயக்கன்பட்டி, திருப்பத்தூர், பர்கூர் கிருஷ்ணகிரி பெங்களூர் மற்றும் ஆந்திர மாநிலம் குப்பம், பகுதிகளில் இருந்து வந்து வியாபாரிகள் காய்கறிகள், ஆடு, மாடுகள், கோழி, விற்பனை செய்வதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. தகவலறிந்த திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம், வருவாய் ஆய்வாளர் ராஜேஷ், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து சமூக இடைவெளியின்றி, முக கவசம் அணியாமலும், சந்தைகளில் வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாரிகளிடம் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் தற்போது வாரசந்தை நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளதால் அனுமதியின்றி சமூக இடைவெளியின்றியும், முக கவசம் அணியாமல் இருந்த பல வியாபாரிகளுக்கு ரூ 15ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் கலைந்து செல்ல தாசில்தார் உத்தரவிட்டதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story