பொள்ளாச்சி அருகே தடையை மீறி ஆழியாறு அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள்
பொள்ளாச்சி அருகே தடையை மீறி ஆழியாறு அணைக்கு குளிக்க வந்த பொதுமக்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே தடையை மீறி ஆழியாறு அணைக்கு குளிக்க வந்த பொதுமக்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
சுற்றுலா பயணிகளுக்கு தடை
பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி எழில்மிகுந்த பகுதியில் ஆழியாறு அணை மற்றும் பூங்கா அமைந்துள்ளது. இங்கு கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கேரளா மாநிலம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் 2-வது அலையில் கொரோனா வேகமாக பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஆடிப்பெருக்கன்று ஆழியாறு பூங்கா மற்றும் அணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினரால் தடை விதிக்கப்பட்டது.
மேலும் ஆடி அமாவாசையையொட்டி சுற்றுலா பயணிகள் வருவதற்கு வாய்ப்பு இருந்தால், நேற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்து இருந்தனர்.
போலீசார் எச்சரித்து அனுப்பினர்
இந்த நிலையில் தடை விதிக்கப்பட்டதை அறிந்த சுற்றுலா பயணிகள் பலர் அணையை சுற்றி பார்க்கவும், குளிக்க அழியாறு அணைக்கு வந்தனர். அவர்களை பொதுப்பணித்துறையினர் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களை போலீசார் எச்சரித்து, அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், அங்குவந்த வாலிபர்கள் சிலர் அத்துமீறி ஆழியாறு அணை மற்றும் தடுப்பணையில் குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் கடுமையாக எச்சரித்து திருப்பி அனுப்பினர். இதனால் ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகள் அந்த பகுதியில் செல்பி எடுத்துக்கொண்டு திரும்ப சென்றனர்.
Related Tags :
Next Story