சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் தாலுகா காட்பாடி ரோடு பில்லாந்திப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் புதியதாக சுங்கச்சாவடி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கே.வி.குப்பம் பஸ்நிலையம் எதிரில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். தலைவர் சதீஷ் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார். மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சல்மான் மற்றும் வாணியம்பாடி, வேலூர், ராணிப்பேட்டை, குடியாத்தம், கே.வி.குப்பம் தொகுதி பொறுப்பாளர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story