சூதாடிய 15 பேர் கைது; ரூ.60 ஆயிரம் பறிமுதல்
சூதாடிய 15 பேர் கைது; ரூ.60 ஆயிரம் பறிமுதல்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி மவுண்ட் பிளசண்ட் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அந்த விடுதியை சுற்றி வளைத்தனர்.
அப்போது போலீசார் வருவதை அறிந்த சூதாட்டக்காரர்கள் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் விடுதி கதவை மூடினர். அங்கு சூதாட்டம் நடந்தது உறுதியானது. பின்னர் சூதாட வைத்திருந்த ரூ.60 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் 15 பேரை பிடித்து, போலீஸ் நிலையத்து அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் சூதாடியதாக நீல சந்திரன் (வயது 49), சபரீஷ் (27), முருகன் (52), சீனிவாசன் (57), சுபேர் (45), நாகூர்மீரான் (50), பாலகிருஷ்ணன் (44), ரங்கநாதன் (38), மூர்த்தி (50), லட்சுமணன் (49), தியாகராஜன் (47), பாரூக் (38), பயாஸ் (37), சசிக்குமார் (43), ராம்சிங் (53) ஆகிய 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து சீட்டுக்கட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story