வேலூர் மாவட்டத்தில் மது, சாராயம் விற்ற 3 பெண்கள் உள்பட 10 பேர் கைது
மது, சாராயம் விற்ற 3 பெண்கள் உள்பட 10 பேர் கைது
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மது மற்றும் சாராயம் விற்பனை செய்வதை தடுக்கவும், அதில் ஈடுபடும் நபர்களை கைது செய்யவும் போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மற்றும் சட்டம், ஒழுங்கு போலீசார் பல்வேறு பகுதிகளில் சாராய வேட்டை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் நடைபெற்ற சோதனையில் மது, சாராயம் விற்ற 3 பெண்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 314 லிட்டர் சாராயமும், 10 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story