மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று
புதுச்சேரியில் மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி, ஆக.9-
புதுச்சேரியில் மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
79 பேருக்கு தொற்று
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 490 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 47 பேரும், காரைக்காலில் 10 பேரும், மாகியில் 20 பேரும், ஏனாமில் 2 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 602 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 181 பேரும், வீடுகளில் தனிமை படுத்தப்பட்டு 668 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 112 பேர் குணமடைந்துள்ளனர்.
தடுப்பூசி
புதுச்சேரியில் நேற்று உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. கொரோனாவுக்கு இதுவரை 1800 பேர் பலியாகியுள்ளனர். புதுச்சேரியில் குணமடைவது 97.82 சதவீதமாகவும், இறப்பு 1.48 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரியில் சுகாதார பணியாளர்கள் 19 பேரும், முன்கள பணியாளர்கள் 2 பேரும், பொதுமக்கள் 4 ஆயிரத்து 335 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இதுவரை 7 லட்சத்து 36 ஆயிரத்து 686 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
_____
Related Tags :
Next Story