ஸ்கேட்டிங் பயிற்சியாளர் திடீர் சாவு


ஸ்கேட்டிங் பயிற்சியாளர் திடீர் சாவு
x
தினத்தந்தி 9 Aug 2021 12:57 AM IST (Updated: 9 Aug 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

ரெட்டியார்பாளையத்தில் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் திடீரென்று உயிரிழந்தார்.

மூலக்குளம், ஆக.9-
ரெட்டியார்பாளையத்தில் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் திடீரென்று உயிரிழந்தார்.
ஸ்கேட்டிங் பயிற்சியாளர்
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணி ராஜ். இவரது மகன் அஜித்ராஜவர்மன் (வயது 28), இவர் கோவையில் தங்கி தனியார் பள்ளியில் ஸ்கேட்டிங் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஸ்கேட்டிங் பயிற்சியின் போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அஜித்ராஜவர்மனுக்கு கை மற்றும் இடுப்பில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊரான புதுச்சேரிக்கு வந்தார். 
மயங்கிய நிலையில்...
நேற்று முன்தினம் மதியம் தனது நண்பர்களுடன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு படுத்துவிட்டார். மாலை அவரது தாய் அந்தோணியம்மாள், டீ குடிப்பதற்காக மகனை எழுப்பியபோது, மயங்கிய நிலையில் இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அஜித்ராஜவர்மன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்ராஜவர்மனின் திடீர் சாவு குறித்து விசாரித்து வருகின்றனர்.
____

Next Story