குமரியில் இன்று கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்


குமரியில் இன்று கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 9 Aug 2021 1:38 AM IST (Updated: 9 Aug 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் இன்று 40 இடங்களில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இன்று 40 இடங்களில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.
கோவிஷீல்டு தடுப்பூசி
குமரி மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) 40 இடங்களில் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி முகாம் நடக்கிறது. அதாவது செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு, கிள்ளியூர், தூத்தூர், குட்டக்குழி, கோதநல்லூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நாகர்கோவிலில் டதி பெண்கள் பள்ளி, சால்வேசன் ஆர்மி பள்ளி, இந்து கல்லூரி ஆகியவற்றில் நடக்கும் முகாமில் அனைத்து வயதினருக்குமான கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்காக ஆன்லைன் மூலம் https://bookmyvaccine.kumaricovidcare.in டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. மேலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மட்டும் நேரடி டோக்கன் மூலம் வழங்கப்படுகிறது.
குழித்துறை அரசு ஆஸ்பத்திரி, கோட்டார் கவிமணி பெண்கள் பள்ளி ஆகியவற்றில் வெளிநாடு செல்வோருக்கான கோவிஷீல்டு 2-வது டோஸ் தடுப்பூசி நேரடி டோக்கன் மூலம் செலுத்தப்படுகிறது. மேலும் பூதப்பாண்டி, கன்னியாகுமரி, குளச்சல், சேனாம்விளை, கருங்கல், அருமனை, குலசேகரம், பத்மநாபபுரம் ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளிலும், நாகர்கோவிலில் வடசேரி அரசு தொடக்கப்பள்ளி, மறவன்குடியிருப்பு பிஷப் ஆரோக்கியசாமி பள்ளி, கார்மல் பள்ளி ஆகியவற்றில் அனைத்து வயதினர் மற்றும் நீரழிவு நோயாளிகளுக்கும் நேரடி டோக்கன் மூலம் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
கோவேக்சின் தடுப்பூசி
பெருமாள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஈத்தவிளை அரசு உயர்நிலைப்பள்ளி, புத்தளம் எல்.எம்.பி.சி. மேல்நிலைப்பள்ளி, கொடுப்பைக்குழி அரசு மேல்நிலைப்பள்ளி, திருத்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, பளுகல் அரசு மேல்நிலைப்பள்ளி, மங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி, பத்மநாபபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், கருங்கல் அரசு ஆஸ்பத்திரி மற்றும் நாகர்கோவிலில் பெருவிளை அரசு பள்ளி, டி.வி.டி. பள்ளி, பறக்கை அரசு பள்ளி, தட்டான்விளை தேவி கலையரங்கம், ஏறும்புகாடு அரசு நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் நடைபெறும் முகாமில் கோவேக்சின் தடுப்பூசி நேரடி டோக்கன் முறையில் வினியோகிக்கப்பட்டு, தடுப்பூசி போடப்படுகிறது.
மேலும் நாகர்கோவிலில் அலோசியஸ் பள்ளி, எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி ஆகியவற்றில் ஆன்லைன் மூலம் கோவேக்சின் டோஸ் செலுத்தப்படுகிறது.

Next Story