புத்தானத்தம் அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை கொட்டும் மழையில் பத்திரமாக மீட்பு
புத்தானத்தம் அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை கொட்டும் மழையில் பத்திரமாக மீட்கப்பட்டது.
மணப்பாறை,
புத்தானத்தம் அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை கொட்டும் மழையில் பத்திரமாக மீட்கப்பட்டது.
கிணற்றில் விழுந்த காட்டெருமை
மணப்பாறையை அடுத்த புத்தானத்தம் அருகே உள்ள காடபிச்சம்பட்டியை சேர்ந்தவர் தனியார் ஒவருக்கு சொந்தமான சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் நேற்று காலை காட்டெருமை ஒன்று தவறி விழுந்தது. மாட்டின் சப்தம் கேட்ட தோட்டத்தின் உரிமையாளர் கிணற்றில் பார்த்த போது காட்டெருமை கிணற்றில் விழுந்திருப்பது கண்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இதுபற்றி அறிந்ததும் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டனர்.
உடனே வனத்துறை மாவட்ட அலுவலர் சுஜாதா தலைமையிலான வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் வந்து பார்த்த போது காட்டெருமை மிகவும் ஆக்ரோசமாக இருந்ததால் மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தி மீட்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி இதுபற்றிய தகவல் ஓசூர் கால்நடை மருத்துவக்குழுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
கொட்டும் மழையில் மீட்பு பணி
கால்நடை மருத்துவர் பிரகாஷ் ஒரு தொட்டி மூலம் கிணற்றில் இறங்கி துப்பாக்கி மூலம் காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்த முயற்சித்தார். ஆனால் மழை பெய்ய ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் மழை வெளுத்து வாங்க ஆரம்பித்தது. இருந்தாலும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காட்டெருமை மீட்கும் பணி தொடர்ந்தது.
அதன்படி சிறிது நேரத்தில் மயக்க ஊசி செலுத்தப்பட்டதும் காட்டெருமை மயங்கியது. உடனே துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் மற்றும் மருத்துவக்குழு கிணற்றில் இறங்கி காட்டெருமையை கயிற்றில் கட்டி கிரேன் மூலம் மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் காட்டெருமைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு டிராக்டரில் ஏற்றி சென்று அருகில் உள்ள வன பகுதியில் விடப்பட்டது.
Related Tags :
Next Story