ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி


ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 9 Aug 2021 2:22 AM IST (Updated: 9 Aug 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரம் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

குலசேகரம்:
குலசேகரம் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
பால் வெட்டும் தொழிலாளி
குலசேகரம் அருகே அஞ்சுகண்டறை பகுதியை சேர்ந்தவர் சேதுகுமார். இவரது மகன் ஸ்டெலின் (வயது 28), திருமணம் ஆகாதவர். இருவரும் பால் வெட்டும் தொழிலாளர்கள்.
இவர்கள் தினமும் அதிகாலை 2 மணிக்கு ரப்பர் தோட்டங்களில் பால் வெட்ட செல்வது வழக்கம். அதன்படி நேற்று அதிகாலையில் தந்தை, மகன் இருவரும் மணியங்குழி அருகே உள்ள ஒரு தனியார் ரப்பர் தோட்டத்தில் பால் வெட்ட சென்றனர். 
அந்த தோட்டத்தையொட்டி கோதையாறின் கிளை ஆறு பாய்ந்து செல்கிறது. மகன் ஸ்ெடலின் ஆற்றின் கரையில் நின்ற மரத்தில் பால் வெட்டி கொண்டிருந்தார்.
பரிதாப சாவு
அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தின் வேரில் கால் தடுக்கி ஆற்றில் விழுந்தார். அவர் தன்னை காப்பாற்றுமாறு சத்தம் போட்டார். ஆனால், அவரது தந்தை சேதுகுமார் ேதாட்டத்தின் மறு பகுதியில் நின்றதால் இவரது கூக்குரல் கேட்கவில்லை. இதனால், ஸ்டெனில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
சிறிது நேரம் கடந்து சேதுகுமார் மகனை தேடினார். அப்போது, ஆற்றின் கரையில் பால் வெட்டும் கத்தி கிடந்தது. தொடர்ந்து அவரை தேடி பார்த்த போது ஆற்றில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. 
இதுகுறித்து குலசேகரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆற்றில் மூழ்கி வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story