பொதுமக்கள் முற்றுகையிட்டு கோரிக்கை மனு


பொதுமக்கள் முற்றுகையிட்டு கோரிக்கை மனு
x
தினத்தந்தி 9 Aug 2021 4:48 PM IST (Updated: 9 Aug 2021 4:48 PM IST)
t-max-icont-min-icon

அவினாசி அருகே குடியிருப்பு பகுதிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மாட்டு இறைச்சி கடையை அப்புறபடுத்த வேண்டும் என்று அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அவினாசி
அவினாசி அருகே குடியிருப்பு பகுதிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மாட்டு இறைச்சி கடையை அப்புறபடுத்த வேண்டும் என்று அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியதாவது
அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சி மகாநகர், ருக்மா கார்டன் பகுதியில் உள்ள ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.  இந்த நிலையில் குடியிருப்பு பகுதிக்கு அருகில் மாட்டு இறைச்சி கடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் கழிவுகள் ஆங்காங்கே வீதிகளிலும், தனியார் கிணறுகளிலும் கொட்டப்படுகிறது.  இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இறைச்சி கடையை அப்புறப்படுத்த வேண்டும். 
இவ்வாறுஅந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story