தடுப்பூசி மையம் அமைக்க கோரி சாலை மறியல்
தடுப்பூசி மையம் அமைக்க கோரி சாலை மறியல்
சரவணம்பட்டி
கொண்டையம்பாளையம் ஊராட்சியில் தடுப்பூசி மையம் அமைக்க கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
சாலை மறியல்
கோவையை அடுத்த எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சி கோட்டைபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் தடுப்பூசி முகாம் நேற்று நடைபெறும் என்று தகவல் பரவியது. இதனால் அங்கு சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர்.
ஆனால் அப்பள்ளியில் தடுப்பூசி முகாம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கோட்டைபாளையம் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த சுகாதார ஆய்வாளர் முருகேசன் மற்றும் கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது
தடுப்பூசி முகாம்
கோட்டைபாளையம் பகுதியில் 3500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது கொரோனா 3-வது அலை பரவ வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.
ஆனால் எங்களது பகுதியில் இதுவரை 200 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
இங்கு போதுமான அளவு தடுப்பூசி முகாம் நடைபெறாததே காரணம்.இதனால் முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கோட்டைபாளையம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்க வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதைத்தொடர்ந்து, தடுப்பூசி முகாம் சரியான முறையில் நடத்தப்ப டும். அனைவருக்கும் தடுப்பூசி போட வழிவகை செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story