திருவாரூர் மாவட்ட பகுதிகளில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்


திருவாரூர் மாவட்ட பகுதிகளில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2021 8:14 PM IST (Updated: 9 Aug 2021 8:14 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

திருவாரூர்:-

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

திருவாரூர்

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். போராடும் விவசாயிகள் மீதான அடக்குமுறையை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு சார்பில் மனித சங்கலி போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றவர்கள் வரிசையாக நின்று கைகளை கோர்த்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மன்னார்குடி

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் மின்சார திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பழைய பஸ் நிலையம் அருகே மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ், விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் ஜோசப், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் துரை அருள்ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டியில் புதிய பஸ் நிலையம் தொடங்கி பழைய பஸ் நிலையம் வரை மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர்கள் உலகநாதன், முருகையன், ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன், ஒன்றிய செயலாளர் பாலு, நகர செயலாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம்

நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் தமிழார்வன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

Next Story