தூக்குப்போட்டு பெண் தற்கொலை
வடமதுரை அருகே பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி அருகே உள்ள சடையம்பட்டியை சேர்ந்த கதிர்வேல் மனைவி தனபாக்கியம் (வயது 41). இவர் கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதனால் மனமுடைந்த தனபாக்கியம் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனபாக்கியம் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தனபாக்கியத்தின் மகன் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story