கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 9 Aug 2021 8:33 PM IST (Updated: 9 Aug 2021 8:33 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கீழக்கரை, 
கீழக்கரை நகராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கீழக்கரை நகராட்சி மற்றும் சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் வாரம் 6 நாட்கள் தடுப்பூசி செலுத்தப்படும் என்று வட்டார மருத்துவர் ராசிக்தீன் மற்றும் நகராட்சி ஆணையர் பொறுப்பு பூபதி ஆகியோர் தெரிவித்தனர். முகாமில் தாசில்தார் முருகேசன், நகராட்சி பொறியாளர் மீரா அலி, வர்த்தக சங்க தலைவர் செய்யது ஜகுபர், செயலாளர் பாஸ்கரன், துணை செயலாளர் நூர் ஹசன், பொருளாளர் நாகேசுவரன், முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம்,  மேற்பார்வையாளர் சக்தி, பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story