மீனவர்கள் போராட்டம்
கடல் மீன்வள சட்ட மசோதாவை கண்டித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாயல்குடி,
சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் ஆழ்கடல் மீன்பிடி கடற்கரை தளத்தில் இந்திய கடல் மீன் வள சட்ட மசோதாவை கண்டித்து ஏராளமான மீனவர்கள் மற்றும் கடல்சார் தொழிலாளர் சங்கம் சார்பில் படகுகளில் கருப்புக் கொடிகளை கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிராமத் தலைவர் ஜான் போஸ்கோ தலைமை தாங்கினார். மூக்கையூர், நரிப்பையூர், ரோச்மாநகர் மீனவ சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இந்த புதிய சட்ட மசோதாவால் தமிழகத்தில் அதிகஅளவு மீனவர்கள் வசிக்கக்கூடிய குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறு தொழில் மீனவர்கள் அதிக அளவில் பாதிக்கப் படுவார்கள். எனவே பாரம்பரிய மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவ குடும்பத்தை பாதுகாக்க சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story