கரும்பு தோட்டத்தில் தீ
கரும்பு தோட்டத்தில் தீ விபத்து
முத்தூர்
முத்தூர் அருகே உள்ள சாலியங்காட்டுபள்ளத்தை சேர்ந்தவர் குப்புசாம. இவர் தனது தோட்டத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிர் சாகுபடி செய்து உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை 10.45 மணிக்கு இவரது தோட்டத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள கரும்பு பயிரின் ஒரு பகுதியில் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. அப்போது பலத்த காற்றின் வேகத்தினாலும், சுட்டெரிக்கும் கடும் கோடை வெப்பத்தின் தாக்கத்தினாலும் தீ மளமளவென்று கரும்பு பயிர் முழுவதும் வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
இதுபற்றி தகவல் அறிந்த வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சி.தனசேகரன், வேலுச்சாமி போக்குவரத்து தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து 1 மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த தீ விபத்தில் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கரும்புகள் எரிந்துசேதம் அடைந்து நாசமாகின. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story