100 சதவீதம் தடுப்பூசி செலுத்த திட்டம்


100 சதவீதம் தடுப்பூசி செலுத்த திட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2021 10:35 PM IST (Updated: 9 Aug 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

பசும்பொன் கிராமத்தினருக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

கமுதி, 
கமுதி அருகே பசும்பொன்னில் வருகிற அக்டோபர் மாதம் 30-ந்தேதி நடைபெறவிருக்கும் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு அந்தகிராம மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா வருகிற அக்டோபர் மாதம் 30-ந் தேதி நடைபெறும். இதில் தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்க உள்ள நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சந்திரகலா உத்தரவின் பேரில் பசும்பொன் கிராம பொதுமக்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் நோக்கில் நேற்று வட்டார மருத்துவ அலுவலர் அசோக் மற்றும் கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாவித்திரி, ரவி ஆகியோர் தலைமையில், ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோரது முன்னிலையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் மருத்துவர்கள் ஆதில்ஷேக், சுகதேவ், சுகாதார மேற்பார்வையாளர் பொண்ணுபாக்கியம், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story