அங்கன்வாடி பணியாளர்களுக்கு விலக்கு
அங்கன்வாடி பணியாளர்களுக்கு விலக்கு
பொள்ளாச்சி
கொரோனா கணக்கெடுப்பு பணியில் இருந்து அங்கன்வாடி பணியாளர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமை தாங்கி மனுக்களை வாங்கினார்.
அப்போது தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஒன்றியத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை முன்கள பணியாளர்களாக நியமனம் செய்து குறைந்தது 100 வீடுகளுக்கு சென்று சளி, இருமல், காய்ச்சல் இருக்கிறதா? என்று கணக்கெடுக்க தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
விலக்கு அளிக்க வேண்டும்
மேலும் ஜிகா வைரஸ், டெங்கு பரவுவதையொட்டி ஊரக மற்றும் நகர்புறங்களில் உள்ள வீடுகளுக்கு சென்று தடுப்பு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக எங்கள் துறை சார்ந்த பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. எனவே கொரோனா கணக்கெடுப்பு பணியில் இருந்து அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
செல்போன் கடை வியாபாரிகள் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில், கொரோனா பரவல் காரணமாக அரசு விதிகளின்படி கடைகளை நடத்தி வருகிறோம்.
எங்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுக்கப்பட்டு இருக்கும் நேரம் குறைவாக இருக்கிறது. எனவே காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
ரேஷன் கடை கட்டிடம்
குஞ்சிபாளையம் பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதி மூலம் ரூ.6 லட்சத்து 35 ஆயிரம் செலவில் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
ஆனால் பல ஆண்டுகள் ஆகியும் ரேஷன் கடை திறக்கப்படவில்லை. எனவே அதை திறக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
Related Tags :
Next Story