மாவட்ட செய்திகள்

கார் டிரைவர் திடீர் சாவு + "||" + Sudden death

கார் டிரைவர் திடீர் சாவு

கார் டிரைவர் திடீர் சாவு
கார் டிரைவர் பரிதாபமாக இறந்தார்
வெள்ளியணை
கோவை மாவட்டம் துடியலூர் அப்பாநாயக்கன்பாளையம் பகுதி கேப் டவுன் ரோஜா வீதியை சேர்ந்தவர் விமல் (வயது 37), கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது காரில் சவாரி ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே உள்ள கொள்ளுதண்ணிபட்டி கோவிலுக்கு வந்தார். பின்னர் வெள்ளியணை வழியாக கோவைக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தார். அப்போது வெள்ளியணை மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தார். இதையடுத்து உடன் வந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்தசம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஓடும் பஸ்சில் முன்னாள் ராணுவ வீரர் திடீர் சாவு
ஓடும் பஸ்சில் முன்னாள் ராணுவ வீரர் திடீரென்று இறந்தார்.
2. தொழிலாளி திடீர் சாவு
நெல்லை அருகே தொழிலாளி திடீரென்று இறந்தார்.
3. கண் சிகிச்சைக்கு வந்த முதியவர் திடீர் சாவு
நெல்லையில் கண் சிகிச்சைக்கு வந்த முதியவர் திடீரென இறந்தார்.
4. சின்னசேலம் அருகே ஊரக வேலை திட்ட பெண் தொழிலாளி திடீர் சாவு
சின்னசேலம் அருகே ஊரக வேலை திட்ட பெண் தொழிலாளி திடீர் சாவு
5. துக்க நிகழ்ச்சிக்கு வந்த வாலிபர் திடீர் சாவு
முக்கூடல் அருகே துக்க வீட்டிற்கு வந்த வாலிபர் திடீரென்று இறந்தார்.