மனித சங்கிலி போராட்டம்


மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2021 12:52 AM IST (Updated: 10 Aug 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

குளித்தலை
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்கள், மின்சார திருத்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர் சட்டத்திருத்தங்களை திரும்ப பெறவேண்டும், 100 நாட்கள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்திட வேண்டும், அதை நகர்புறங்களுக்கு விரிவு படுத்தக்கோரியும், பொதுத்துறையை தனியாருக்கு விற்கக்கூடாது என்றும் வலியுறுத்தி, வெள்ளையனே வெளியேறு போராட்ட தினமான நேற்று இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டம் குளித்தலையில் நடந்தது.
இந்த போராட்டத்திற்கு இச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துச்செல்வன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் குளித்தலை காந்தி சிலையில் இருந்து பஸ் நிலையம் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

Next Story