வாலிபருக்கு கத்திக்குத்து- 2 பேர் கைது


வாலிபருக்கு கத்திக்குத்து- 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 Aug 2021 1:23 AM IST (Updated: 10 Aug 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

வாலிபருக்கு கத்திக்குத்து- 2 பேர் கைது

சிவகாசி
சிவகாசி நாரணாபுரம் முனியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் வள்ளிநாயகம்(வயது 26). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சேர்மராஜன் (28), ராம்குமார் (22) ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்தநிலையில் வள்ளிநாயகம் அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு டிபன் வாங்க சென்ற போது அங்கு வந்த சேர்மராஜ், ராம்குமார் ஆகியோர் தகராறு செய்துள்ளனர். பின்னர் சேர்மராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வள்ளிநாயகத்தை குத்தினர்.. இதில் வள்ளிநாயகத்துக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சேர்மராஜன், ராம்குமாரை கைது செய்தனர்.

Next Story