குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
சங்கரன்கோவில் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
தென்காசி:
சங்கரன்ேகாவில் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் ெ்பாதுமக்கள் மனு வழங்கினர்.
குடிநீர் தட்டுப்பாடு
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குைறதீர்க்கும் கூட்டம் நேற்று நடத்தப்படவில்லை. இதற்கு பதிலாக கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டு சென்றனர்.
சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூர் 7-வது வார்டு பொதுமக்கள் திரண்டு வந்து மனு வழங்கினர். அதில், ‘தங்களது வார்டில் கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. குடிநீருக்காக சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது. எனவே 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர வேண்டும். இதற்கான இடத்தை நாங்கள் தருகிறோம். இந்த பணி நடைபெறும் வரையிலும் வீடுகளுக்கு கூடுதல் குடிநீர் வழங்க வேண்டும். மேலும் இங்கு பணியாற்றி வரும் பஞ்சாயத்து செயலாளர் பாரபட்சமாக செயல்படுவதால், அவரை வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பணி நிரந்தரம்
இதேபோன்று செவிலியர்கள் திரண்டு வந்து வழங்கிய மனுவில், ‘தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் கடந்த ஜூன் மாதம் தற்காலிக செவிலியர் பணிக்காக நாங்கள் தேர்வு செய்யப்பட்டோம். அப்போது தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த நாங்கள் அதனை ராஜினாமா செய்து விட்டு, அரசு ஆஸ்பத்திரிகளில் பணியில் சேர்ந்தோம். தற்போது சிலரை மட்டும் பணியில் வைத்து விட்டு எங்களை வேண்டாம் என்று அனுப்பி விட்டார்கள். சில மாவட்டங்களில் தற்காலிக பணியாளர்கள் தொடர்ந்து பணி செய்து வருகிறார்கள். எனவே எங்களது பணிக்காலத்தை நீட்டித்து பணியை நிரந்தரம் செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story