கல்குவாரி குட்டையில் மூழ்கி கொத்தனார் சாவு


கல்குவாரி குட்டையில் மூழ்கி கொத்தனார் சாவு
x
தினத்தந்தி 10 Aug 2021 2:07 AM IST (Updated: 10 Aug 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

கல்குவாரி குட்டையில் மூழ்கி கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

குன்னம்:
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள தத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 36). கொத்தனார். இவரது உறவினர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கல்பாடி எறையூர் கிராமத்தை சேர்ந்த சேகருக்கு உடல்நலம் சரியில்லாததால், அவரை பார்ப்பதற்காக விஜயகுமார், தனது மனைவி ரம்யா மற்றும் குழந்தைகளுடன் எறையூர் கிராமத்திற்கு நேற்று வந்தார். அங்கு விஜயகுமார் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மதியம் இயற்கை உபாதை கழிப்பதற்காக விஜயகுமார் வெளியே சென்றார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு வராததால், உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். இந்நிலையில் ஒருவர், அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் தவறி விழுந்து மூழ்கியதாக, பெரம்பலூர் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 20 அடி ஆழம் உள்ள குட்டையில் இறங்கி, இறந்தவரின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதையடுத்து உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது, குட்டையில் மூழ்கி இறந்தது விஜயகுமார் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story