சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 முதியவர்கள் பலி- மேலும் 85 பேருக்கு தொற்று உறுதி


சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 முதியவர்கள் பலி- மேலும் 85 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 10 Aug 2021 3:37 AM IST (Updated: 10 Aug 2021 3:37 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 முதியவர்கள் பலியானார்கள். மேலும் 85 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 முதியவர்கள் பலியானார்கள். மேலும் 85 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 89 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 85 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 13 பேரும், சேலம் ஒன்றிய பகுதிகளில் 34 பேரும், ஆத்தூர் பகுதியில் 6 பேரும், நகராட்சி பகுதிகளில் 7 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
இதுதவிர மாவட்டத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு வந்த 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5 முதியவர்கள் பலி
மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 94 ஆயிரத்து 145 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 88 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 836 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும், உயிர்பலிகள் தினமும் அதிகளவு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் சேலத்தை 61, 64, 67, 65 ஆகிய வயதுடைய 4 முதியவர்கள் கொரோனாவுக்கு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக இறந்தனர். இதேபோல் 75 வயதுடைய முதியவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி தனியார் ஆஸ்பத்திரியில் பலியானார். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு 1,591 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story